Tuesday, September 17, 2024
Home History Temples ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம்

நமது நாட்டில் சைவ ஆகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம் , தந்திரம் முதலியனவற்றையும் ஒட்டியும், ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவா ஆகமங்கள் இருபத்தேட்டோடு சைவ உபகமங்கள் நூற்றிப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் 64 ங்கு ஆகும். பஞ்சராத்திராகமங்கள் 108 என்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்திரிமும், வைகானஸமுகமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோயில்களும் பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆலய நிர்மாணம், பிரதிஷ்டை, நித்திய பூஜை, நைமித்திக பூஜை, திருவிழாக்கள், தீக்கைகள்,மந்திரங்கள், முதலியவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

எந்த ஆகமத்தை ஒட்டி ஓர் ஆலயம் நிறுவப்பட்டதோ அந்த ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டு பூஜைகள் முதலியன நடைபெற்று வருகின்றன. ஆதலால் ஆலயப்பூஜை, பிரதிஷ்டை முதலியன பலவிதமாக நடந்து வருகின்றன. ஆலய நிர்மாணங்கள் ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்தம், அந்தரிதம் என நான்கு வகைப்படும்.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments