Thursday, September 19, 2024
Home Health & Fitness Herbs & Medicines கற்பூரவள்ளி-மரபுசார் மருத்துவம்

கற்பூரவள்ளி-மரபுசார் மருத்துவம்

கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள் போல நீண்ட மயிர்த் தாவிகளைக் கொண்டிருக்கும்.இது சுமார் எட்டே மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. முதிர்வடைந்த இலைகளில் “மென்தால் ” அதிக அளவில் காணப்படுகிறது.மென்தால் என்ற வேதிப்பொருள் சளி சேரக்கூடிய பகுதிகளில் உள்ள வீக்கத்தைக் குறைகின்றது.

காச இருமல், கதித்தம சூரியையாம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் – வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும் போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு!

அகத்தியர் குணபாடம்

கற்பூரவள்ளி சளி, இருமல், கபம் சம்பந்தமான நோய்களை தணிக்கும் மருந்தாக பயன்படுகிறது. வியர்வை பெருக்கியாகவும் காய்ச்சல் போக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது என்று அகத்தியர் குணபாடம் விளக்குகிறது.
குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்குகுடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் கற்பூரவள்ளி இலைகளை 4 அல்லது 5 போட்டு சிறிது நேரம் களைத்து எடுத்து விட வேண்டும். இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்திருக்கும். அந்த நீரையே கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளியின் தீவிரம் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்க கொண்டு இருகிப் போயிருக்கும். இதனால், அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாகக் கூட மாற கூடும் இவைகளுக்கு கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 ml அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்பு சளி நீங்கும்.

முதியவர்களுக்கு :
கற்பூரவள்ளி இல்லை, தூதுவளை இலை, வல்லாரை ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 ml தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு 50 ml ஆகா சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும், மூச்சுக்கு குழல் அடைப்பு சீராகும்.

காச சூரணம்:
கற்பூரவள்ளி, ஆடாதொடா இலை இவைகளை நிழலில் உலர்த்தி, திப்பிலி இளம் வெறுப்பாக வருது சிற்றரத்தையோடு சமபாகமாக இடித்து பொடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதனை ஒரு கரண்டி அளவு எடுத்து தேனுடன் கலந்து தினமும் மூன்று அல்லது நான்கு வேலை உட்கொண்டால் ஈழை, இருமல், காசம், ரத்த வாந்தி ஆகியவை குணமாகும்.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments