Tuesday, September 17, 2024
Home Health & Fitness Traditional Treatments சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

உங்கள்‌ தோற்றத்தை இளமையாகவும்‌, சருமத்தைப்‌ பாதுகாக்கவும்‌ இதோ சில இயற்கை வழிமுறைகள்

உலர்ந்த மகிழம்பூபொடி -200 கிராம்‌
இச்சிலிக்‌ கிழங்கு பொடி – 700கிராம்‌
கஸ்தூரி மஞ்சள்‌ தூள்‌ – 700கிராம்‌
கோரைக்கிழங்கு பொடி -100 கிராம்‌
சந்தனத்தூள்‌ – 750 கிராம்‌
செஞ்சந்தனத்தூள்‌ – 700கிராம்‌

இவற்றை ஒன்றாகச்‌ சேர்த்து பன்னீர்‌ கலந்து சிறு சிறு தட்டைகளாகத்‌ தட்டி நிழலில்‌ உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்‌.

இந்த தட்டைகளில்‌ இரண்டு எடுத்து பசும்பாலில்‌ போட்டு ஊறவைத்து, குழைத்து உடல்‌ முழுவதும்‌ பூசி அரை மணி நேரம்‌ கழித்து குளிக்க வேண்டும்‌. இவ்வாறு வாரம்‌ இருமுறை செய்தாலே போதும்‌ சருமம்‌ எவ்வித புறச்சூழ்நிலை பாதிப்பும்‌ இன்றி பளபளக்கும்‌. தினமும் கூட முயற்சி செய்யலாம்‌.

குளியல்‌ பொடி
கஸ்தூரி மஞ்சள்‌ – 100 கிராம்‌
சோம்பு – 100 கிராம்‌
வெட்டிவேர்‌ – 200 கிராம்‌
அகில்‌ கட்டை – 200 கிராம்
சந்தனத்தூள்‌ – 200 கிராம்
கார்போக அரிசி – 200 கிராம்
விலாமிச்சம்‌ வேர்‌ – 200 கிராம்
கோரைக்கிழங்கு -‌ 200 கிராம்
கோஷ்டம்‌ – 200 கிராம்
ஏலரிசி – 200 கிராம்
சாம்‌பிராணி – 250 கிராம்
பாசிப்பயறு – 500 கிராம்

இவற்றை தனித்தனியாக காயவைத்து பொடியாக்கிய பிறகு ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும்‌ சோப்பிற்குப்‌ பதிலாக இந்த பொடியை தேயைான அளவு எடுத்து குழைத்து உடலில்‌ பூசி இளம்சூடான நீரில்‌ குளித்து வந்தால்‌ சருமம்‌ பாதுகாப்படையும்‌, ஆரோக்கியமாக இருக்கும்‌. வியர்வை நாற்றம்‌ நீங்கும்‌. தோலில்‌ உண்டான சொறி, சிரங்கு, தேமல்‌, வியர்குரு, கற்றாழை நாற்றம்‌ போன்றவை அகலும்‌.

இது குழந்தைகள்‌ மற்றும்‌ பெண்களுக்கு ஏற்ற சிறந்த குளியல்‌ பொடி ஆகும்‌.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments