Thursday, September 19, 2024
Home Health & Fitness Herbs & Medicines சிவகரந்தை - மரபுசார் மருத்துவம்

சிவகரந்தை – மரபுசார் மருத்துவம்

மனித உடல் என்றும் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடனும் இளமைப் பொலிவுடனும் திகழ சித்தர்கள் கண்டறிந்த மூலிகைகள் தான் கற்ப மூலிகைகள். அவற்றில் சிவகரந்தையின் பயன்பாடு அளவற்றவை. மனித உடல் என்றும் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடனும் இளமைப் பொலிவுடனும் திகழ சித்தர்கள் கண்டறிந்த மூலிகைகள் தான் கற்ப மூலிகைகள். அவற்றில் சிவகரந்தையின் பயன்பாடு அளவற்றவை.

சிவகரந்தை அதிக மருத்துவ குணம் கொண்ட அரியவகை மூலிகைச் செடி. மிகுந்த வாசனை உடைய சிறுசெடி வகையைச் சார்ந்தது. பிளவு கொண்ட இலைகளையும் ஊதா நிறப் பூக்களையும், ரோம வளரிகளையுடைய தண்டுகளையும் கொண்டது. சிவகரந்தையின் முழுப் பகுதியும் மருத்துவத் தன்மை கொண்டது.

கந்த நாறுகரந்தையதின் குணம்
மந்த வாதங்கரப்பனை மாற்றிடுத்
தொந்த ரோகந் துடைக்கு மிருமலர
மந்த நோயுந் தணிக்கும் மனணையே

-தேரையர்

சிவகரந்தை என்னும் இந்த மூலிகை வாந்தி, சுவையின்மை, ஆண்மைக் குறைவு , கரப்பான் எனப்படும் தோல் நோய் , இருமல் போன்றவற்றை நீக்கும் . பசியை உண்டாக்கும்.

சிவகரந்தையின் பயன்கள் :
தோல் நோய்களுக்கான தீர்வு:
சிவகரந்தை இலைகளை நிழலில் காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, வேளைக்கு 1 கிராம் வீதம் தினமும் இருவேளை உண்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
மேலும் இளம்பூக்களுடைய சிவகரந்தை செடிகளை நிழலில் காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தேனுடன் குழைத்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் மினுமினுப்படையும்.

கிருமி தோற்றுக்கான தீர்வு:
சிவகரந்தை இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவைத்து பாதியாக வற்றிய பின்பு வடிகட்டி, அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 10 நாட்கள் குடித்துவர கல்லீரலில் தோன்றும் கிருமித்தோற்று நீங்கும்.
இதன் வேரை காயவைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கும். மேலும் பலவகையான ரத்தப்போக்குகள் குணமாகும்.

இருமல் இரைப்பு குணமாக:
சிவகரந்தை இலைகளை சாறெடுத்து மிளகுத்தூள் சேது காலை மாலை இருவேளை குடித்துவர இரைப்பு எனப்படும் இழுப்பு னாய் மற்றும் நெஞ்சில் படர்ந்துள்ள சளி நீங்கும். சிவகரந்தை இலையின் சாறெடுத்து சம அளவு தென் கலந்து குடித்து வர நாள்பட்ட இருமல் குணமாகும்.

வயிற்றுப்பூச்சிகள் நீங்க:
சிவகரந்தை வேரை பொடியாக்கி 2 கிராம் எடை வீதம் காலை,மாலை இருவேளையும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

பசியின்மை தீர்க்க:
சிவகரந்தை இளம் செடியை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்ட, தினமும் இரண்டு கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை , மாலை இருவேளையும் குடித்து வாறே வயிறு மந்தம் நீங்கி நன்கு பசி உண்டாகும். உடல் பலகீனம் நீங்கி பலம் பெரும். உடலின் உள்ள செல்களை அழிவில் இருந்து காப்பாற்றும்.

இளநரை நீங்க:
சிவகரந்தை செடியை பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் காயவைத்து பொடியாக்கி அதனுடன் சம அளவு கரிசலாங்கண்ணி பொடியையும் சேர்த்தி ஒன்றாகி வைத்துக்கொண்டு தினசரி காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் எடுத்து பசு நெய்யுடன் குழைத்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இளநரை நீங்கும். இது சாப்பிடும் நாட்களில் மாடு,புகை, அதிக காரம் புளிப்பு இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பித்தம் குறைய:
சிவசரந்தை முழுச் செடியை எடுத்து நிழலில் நன்கு உலர்த்தி, அதனுடன் அரை பங்கு தோல் நீக்கிய சுக்கு, மிளகு, கருந்துளசி இல்லை போடி சேர்த்து ஒன்றாக இடித்து வைத்துக்கொண்டு, தினமும் ஒரு சிட்டிகை அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து, பித்த அதிகரிப்பால் உண்டான நோய்கள் குணமாகும்.
மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குணமாக சிவகரந்தை முழுத் தாவரத்தை அரைத்து பசையாக்கி மூட்டுகளில் பற்று போடா, மூட்டுவலி குணமாகும்.

சிவகரந்தை கற்பம்:
சிவகரந்தை செடியை வேருடன் எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணமாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை இருவேளை 1 கிராம் அளவு பால், நெய், தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்,
முதல் மாதம் உடல் நாற்றம் நீங்கும்,
இரண்டாம் மாதம் வாத நோய்கள் நீங்கும்,
மூன்றாம் மாதம் பித்த நோய்கள் நீங்கும் ,
நான்காம் மாதம், தோல் நோய்கள் நீங்கும்,
ஐந்தாம் மாதம் பசி கூடும் ,
ஆறாம் மாதம், அறிவு தெளிவு உண்டாகும் ,
ஏழாம் மாதம் உடல் வனப்பு உண்டாகும்,
எட்டாம் மாதம் உடல் தோல் உரியும்,
ஒன்பதாம் மாதம், நரை, திரை, பிணி நீங்கும்,

யோகம் சித்தியாகும் என்று சித்தர் காய கற்பம் விளக்குகிறது என்று சித்த ரகசியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.


Any information published on this website is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this website id for general information purpose only. You should not take any action before consulting with a healthcare professional.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments