Tuesday, September 17, 2024
Home Heritage Lifestyle Food & Recipes சீரகக் குடிநீர்

சீரகக் குடிநீர்

சீரகம் உடலை சீர்படுத்தக்கூடிய தன்மை கொண்டதால் சீர் அகம் என்று அழைக்கின்றனர்.

செய்முறை:

இரண்டு லிட்டர் தண்ணீரில் அரைத் தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து பின் நன்கு ஆற வைத்து வடிகட்டி எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.

பயன்கள் :

வெயிலில் அலைந்து திரும்புவர்கள் சீரகத் தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உடல் சூடு தணிகிறது. வெப்ப நோய்களான வியர்க்குரு, தோல் அரிப்பு, கட்டிகள் போன்றவை அணுகாது. உயர்த்தழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினமும் சீரகக் குடிநீர் அருந்தினால் ரத்தழுத்தம் கட்டுக்குள் வரும். கொலஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும்.

சீராக நீர், அஜீரணக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், நாவின் சுவையின்மை ஆகியவற்றை போக்குவதோடு நன்கு பசியைத் தூண்டிவிடும். கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் சீரகக் குடிநீர் அருந்தினால் கண் சூடு, கண்களை தழுவும் சோர்வு. கண் அயர்ச்சி, உடல் சூடு, போன்றவற்றைத் தடுக்க முடியும்.

நரம்புகளுக்கு பலத்தை கொடுத்து நல்ல தூக்கத்தை உண்டாக்குகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சீரகத் தண்ணீர் அருந்தலாம். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுப்படும்.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments