Tuesday, September 17, 2024
Home Agriculture பஞ்சகாவ்யா செய்முறை -20 லிட்டர்‌

பஞ்சகாவ்யா செய்முறை -20 லிட்டர்‌

தேவையானவை:
பசு சாணம்‌ 5 கிலோ,
பசு கோமியம்‌ 3 லிட்டர்‌, பசும்பால்‌ 2 லிட்டர்‌ காய்ச்சி ஆறினது, 7 முதல்‌ 15 நாட்கள்‌ புளித்த தயிர்‌ 2 லிட்டர்‌,
பசு நெய்‌ 1 லிட்டர்‌ அல்லது கடலை புண்ணாக்கு 2 கிலோ,கரும்பு சாறு 3 லிட்டர்‌ அல்லது 500 கிராம்‌ நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டியை 3 லிட்டர்‌ நீரில்‌ கரைத்து பயன்படுத்தவும்‌), இளநீர்‌ 3 லிட்டர்‌, கனிந்த வாழை பழம்‌ 12, கள்‌ (தென்னை (அ) பனை 2 லிட்டர்‌ அல்லது 2 லிட்டர்‌ வெதுவெதுப்பான நீரில்‌ 40 செல்‌ பேக்கரி ஈஸ்ட்‌ 200 கிராம்‌ உடன்‌ 200 கிராம்‌ நாட்டு சக்கரை கலந்து 15 நிமிடம்‌ வைத்துருந்து சேர்க்கவும்‌ அல்லது பழைய சாதத்தின்‌ நீர்‌ 2 லிட்டர்‌.

செய்முறை:
ஒரு பிளாஸ்டிக்‌ வாளியில்‌ சாணத்துடன்‌ பசு நெய்‌ அல்லது துளாக்கிய புண்ணாக்குடன்‌ பிசைந்து கிளறி (தினமும்‌) மூன்று நாட்களுக்கு மூடி வைக்கவும்‌.

நான்காம்‌ நாள் – மண்பானை (அ) பிளாஸ்டிக்‌ (அ) தொட்டியில்‌ மேற்கூறிய அனைத்தையும்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக சேர்த்து கலக்கவும்‌ பிறகு நூல்‌ துணியால வாய்‌ பகுதியை மூடி வைக்கவும்.

தினசரி இருவேலை கலக்கிவரவும்‌ அப்பெழுதுதான்‌ காற்றேட்டம்‌ ஏற்பட்டு நூண்ணுயிர்கள்‌ நன்கு பெருகும்‌.

15 நாட்கள்‌ பிறகு பயிர்களுக்கு பயன்படுத்தலாம்‌, மேற்கொண்டு 6 மாதம்‌ வரை பயன்படுத்தலாம்‌ தினசரி இருவேலை கலக்கிவரவும்‌.

பயன்படுத்தும்‌ முறை 1 ஏக்கர்‌ இலை வழி உரமாக 100 லிட்டர்‌ நீருடன்‌ 3 லிட்டர்‌ பஞ்சகாவ்யா அல்லது நிலவள ஊக்கியாக 20 லிட்டர்‌ பஞ்சகாவியாவுடன்‌ வாய்க்கால்‌ நீருடன்‌ கலந்து விடலாம்‌ அல்லது விதை நேர்த்திக்காகவும்‌ பயன்படுத்தலாம்‌.

பஞ்சகாவ்யாவின் அறிவியல்‌ முடிவு
• தழை சத்து நிலைநிறுத்தும்‌ அஸோஸ்பயிரில்லம்‌ நுண்ணுயிர்‌ 10,000 கோடி அசடோ பேக்டர்‌ நுண்ணுயிர்‌ 9000 கோடி கிராம்‌ ஒன்றிக்கு

• மணிசத்தை கரைத்துகொடுக்கும்‌ பாஸ்போ பாக்டிரியா நுண்ணுயிர்‌ 7000 கோடி கிராம்‌ ஒன்றிக்கு

• நோய்‌ எதிர்பாற்றலை தரும்‌ ஆடோமோனஸ்‌ நுண்ணுயிர்‌ 6000 கோடி கிராம்‌ ஒன்றிற்கு

• கார அமிலத்தன்மை PH -6.02 மின்‌ கடத்தும்‌ திறன்‌ EC – 3.02

• மொத்தம்‌ கரைந்திடா திடப்பொருள்‌ TDS 3.4% w /w தழைசத்து (Nitrogen ) – 6650 PPM , (part per million) மணிசத்து (phosphorous) 4310, சாம்பல்சத்து (potassium) – 5200 ppm, சோடியம்‌ உப்பு (Sodium) 1600 ppm, சுண்ணாம்பு சத்து (calcium) 1000 ppm, மக்னிசியம்‌ (magnesium) 1000 ppm, குளோரைடு (chloride) 248.50 ppm, போரான்‌ (boran), 0.442 ppm, மங்கனிசு (manganese) – 14.8 ppm, இரும்பு சத்து (iron) 142.5 ppm, துத்தநாகம்‌ (zinc) – 82.000 ppm, செம்பு (copper) 58ppm, கந்தகம்‌ (sulphur) – 0.56 % w /w

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments