Tuesday, September 17, 2024
Home Agriculture பயிர் வளர்ச்சி ஊக்கிகள்- அமிலம் மற்றும் கரைசல்கள்

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்- அமிலம் மற்றும் கரைசல்கள்

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்- அமிலம் மற்றும் கரைசல்கள்

மீன்‌ அமினோ அமிலம்‌

தேவையானவை: நாட்டு சர்க்கரை 1 கிலோ, மீன்‌ கழிவு 1 கிலோ நன்னீர்‌ மீன்‌ கழிவு நன்று (அ) மத்தி, கவலை மீனையே துண்டு துண்டாகவும்‌ வெட்டி பயண்படுத்தலாம்‌

செய்முறை: நாட்டு சர்க்கரை, மீன்‌ கழிவு இரண்டையும்‌ ஒன்றாக கலந்து 21 முதல்‌ 40 நாட்கள்‌ மூடி வைக்கவும்‌ முடிந்தால்‌ ஈ அல்லது கொசு புகமுடியாத ஒரு சிரிய துளையிடவும்‌ வாயு வெளியேர.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை: வளர்ச்சி ஊக்கியாக செயல்படக்கூடியது,செடி சுருங்காது. இந்த அமிலத்தில்‌ இனிப்பு அதிகமாக இருப்பதால்‌ காய்‌ புழுக்கள்‌ உருவாகவாய்ப்புண்டு ஆகையால்‌ காய்கறி செடிகள்‌ பூக்கும்‌ முன்புவரை பயண்படுத்துவது நல்லது. 10 மில்லி மீன்‌ அமிலத்துடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்கவும்‌ அல்லது வாயக்காலில்‌ சொட்டு சொட்டாக கலந்து விடவும்‌. 6 மாதம்‌ வரை வைத்துதிருந்து பயன்படுத்தலாம்‌.

முட்டை கரைசல்‌

தேவையானவை: கோழி அல்லது வாத்து முட்டை 10, முழ்கும்‌ அளவிற்க்கு எலுமிச்சை சாறு (15 Nos, நாட்டு சர்க்கரை 250 கிராம்‌

செய்முறை: பிளாஸ்டிக்‌ வாளியில்‌ முட்டைகளை வைத்து மூழ்கும்‌ அளவு எலுமிச்சை சாறு நிரப்பி காற்றுபுகாமல்‌ முடி வைக்கவும்‌ 10 நாட்கள்‌ பிறகு முட்டையை நன்கு பிசைந்து அதனுடன்‌ நாட்டு சக்கரை சேர்த்து மேலும்‌ 10 நாட்கள்‌ காற்று புகாமல்‌ முடி வைக்கவும்‌. மூன்று மாதம்‌ காலம்‌ வரை வைத்துருந்து பயன்படுத்தலாம்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை: இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, நுண்ணுட்ட சத்து பற்றாக்குறை (பயிர்‌ வெளுத்து காணப்பட்டால்‌ 200 மில்லி கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

அமுதக்கரைசல்‌

தேவையானவை:
பசுசாணம்‌ 1 கிலோ, கோமியம்‌ 1 லிட்டர்‌, 25 கிராம்‌ நாட்டு சக்கரை, 10 லிட்டர்‌ தண்ணீர்‌

செய்முறை:
பசுசாணம்‌ கோமியம்‌, நாட்டு சக்கரை, தண்ணீர்‌ அனைத்தையும்‌ ஒன்றாக கலந்து (60 முறை வல இடபுறம்‌ சுற்றி) பாதுகாப்பாக ஒரு நாள்‌ வைக்கவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு நிலவள ஊக்கி மற்றும்‌ நுண்ணுயிர்‌ பெருக்குதல்‌. 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

அரப்பு இலைக்கரைசல்‌

தேவையானவை:
அரப்பு இலை 2 கிலோ, புளித்த மோர்‌ 5 லிட்டர்‌

செய்முறை:
அரப்பு இலையை நீர்‌ (6 லிட்டர்‌) சேர்த்து நன்றாக அரைதது கரைசல்‌ எடுக்கவும்‌ பிறகு புளித்த மோர்‌ 5 லிட்டர்‌ சேர்த்து வாளியில்‌ அல்லது மண்பாணை 7 நாட்கள்‌ மூடி வைக்கவும்‌

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தூம்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, நிறைய பூ பூக்கும்‌, பூச்சிகள்‌ அண்டாது மற்றும்‌ ஜப்ராலிக்‌ வளர்ச்சி ஊக்கி உள்ளது. 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

தேமோர்க்கரைசல்‌ (முறை 1)

தேவையானவை:

புளித்த மோர்‌ 5 லிட்டர்‌, தேங்காய்‌ பால்‌ 5 லிட்டர்‌ (10 தேங்காய்‌ துருவல்‌)

செய்முறை:
புளித்த மோர்‌, தேங்காய்‌ பால்‌ இவை இரண்டையும்‌ சேர்த்து வாளியில்‌ அல்லது மண்பாணை 7 நாட்கள்‌ மெல்லிய துணி கொண்டு மூடி வைத்து பிறகு பயன்படுத்தவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, நிறைய பூ பூக்கும்‌, பூச்சிகள்‌ அண்டாது மற்றும்‌ சைட்டோசைம்‌ வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்களின்‌ வளர்ச்சியை பொ ருத்து 500 மில்லி முதல்‌ 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

தேமோர்க்கரைசல்‌ (முறை 2)

தேவையானவை:
புளித்த மோர்‌ 5 லிட்டர்‌, தேங்காய்‌ 10, இளநீர்‌ 1 லிட்டர்‌, அழுகிய பழங்கள்‌ 10 கிலோ

செய்முறை:
தேங்காய்‌ துருவல்‌ மற்றும்‌ அழுகிய பழங்களை சாக்கு பையில்‌ கட்டி அதனுடன்‌ புளித்த மோர்‌; சேர்த்து வாளியில்‌ (௮) மண்பாணையில்‌ 7 நாட்கள்‌ மெல்லிய துணி கொண்டு மூடி வைத்து பிறகு பயன்படுத்தவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, நிறைய பூ பூக்கும்‌, பூச்சிகள்‌ அண்டாது மற்றும்‌ சைட்டோசைம்‌ வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்களின்‌ வளர்ச்சியை பொருத்து 500 மில்லி முதல்‌ 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து
தெளிக்க வேண்டும்‌.

தேமோர்க்கரைசல்‌ (முறை 3)

தேவையானவை:
புளித்த மோர்‌ (7 நாட்கள்‌ புளித்த தயிர்‌) 1 லிட்டர்‌, தேங்காய்‌ பால்‌ 2 லிட்டர்‌ ( 4 Nos ), இளநீர்‌ 2 லிட்டர்‌.

செய்முறை:
தேங்காய்‌ பால்‌ மற்றும்‌ புளித்த மோர்‌ சேர்த்து வாளியில்‌ அல்லது மண்பாணையில்‌ 7 நாட்கள்‌ மெல்லிய துணி கொண்டு மூடி வைத்து பிறகு தெளிப்பதர்க்கு 1 மணி நேரத்திர்க்கு முன்பு இளநீர்‌ சேர்த்து பயன்படுத்தவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, நிறைய பூ பூக்கும்‌, பூச்சிகள்‌ அண்டாது மற்றும்‌ சைட்டோசைம்‌ வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்களின்‌ வளர்ச்சியை பொருத்து 500 மில்லி முதல்‌ 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து
தெளிக்க வேண்டும்‌.

நுண்ணுயிர்‌ கரைசல்‌

தேவையானவை:
பப்பாளி 1 கிலோ, பரங்கிக்‌ காய்‌ 1 கிலோ, வாழைப்பழம்‌ 1 கிலோ, நாட்டு சர்க்கரை 1 கிலோ, மூட்டை 1

செய்முறை:
பழங்களை தொலோடு சிறிது சிறிதாக நறுக்கி மற்ற அனைத்தையும்‌ சேர்த்து மூழ்கும்‌ அளவுக்கு தண்ணீ ஊற்றி வாய்‌ குருகளான பிளாஸ்டிக்‌ கேனில்‌ காற்று புகாமல்‌ 15 நாள்‌ வைக்கவும்‌. மேற்கூறிய நாட்கள்‌ பிறகு திறந்து பார்த்தால்‌ வெண்மையான நிறம் தோன்றி இருக்கும்‌ அவ்வாறு இல்லை என்றால்‌ மோலும்‌ 250 கிராம்‌ அல்லது ஒரு கைப்பிடி நாட்டு சர்க்கரை சேர்த்து 15 கழித்து பார்த்தால்‌ நுண்ணுயிர்‌ கரைசல்‌ தயாராகிவிடும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, பூச்சிகள்‌ (இலைசுருட்டு, மஞ்சள்‌ நோய்‌) அண்டாது. பயிர்களின்‌ வளர்ச்சியை பொருத்து 500 மில்லி முதல்‌1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

பழங்காடி (முறை 2)

தேவையானவை:
கனிந்த பூவன்‌ வாழைபழம்‌ 25, நாட்டு சர்க்கரை 5 கிலோ, பரங்கிப்பழம்‌ 2 கிலோ, அரிசி 2 கிலோ, தயிர்‌ 4 லிட்டர்‌, தண்ணீர்‌ 50 லிட்டர்‌

செய்முறை:
கனிந்த பூவன்‌ வாழைபழம்‌, நாட்டு சர்க்கரை, பரங்கிப்பழம்‌, அரிசி ஆகியவற்றை மை போல அரைத்து தண்ணீரில்‌ கரைத்து மற்றும்‌ புளித்த தயிரையும்‌ சேர்த்து 7 நாட்கள்‌ தொடர்ந்து மூன்று வேளையும்‌ கலக்கி வந்தால்‌ கரைசல்‌ தயார்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, காய்கறி மற்றும்‌ பழுங்கள்‌ சுவையாக இருக்கும்‌ 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 12 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

அரிசி கஞ்சி கரைசல்‌

தேவையானவை:
புழுங்கல்‌ அரிசி 1 கிலோ, நாட்டு சக்கரை 1 கிலோ

செய்முறை:
புழுங்கல்‌ அரிசி நன்கு குழைய வேகவைத்து கஞ்சியாக்கவும்‌. வாளியில்‌ அல்லது மண்பாணையில்‌ ஊற்றி 7 நாட்கள்‌ நிழலான அல்லது எருக்குழியில்‌ வைக்கவும்‌. 7 நாட்கள்‌ பிறகு நாட்டு சர்க்கரை கலந்து மீன்டும்‌ 7 நாட்கள்‌ வைக்கவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, கரைசலுடன்‌ 20 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து தெளிக்க வேண்டும்‌.

புண்ணாக்கு கரைசல்‌ (முறை 1)

தேவையானவை:
கோமியம்‌ 10 லிட்டர்‌, கடலை புண்ணாக்கு 2 கிலோ

செய்முறை:
கோமியம்‌ மற்றும்‌ பொடியாக்கிய புண்ணாக்கு. வாளியில்‌ அல்லது மண்பாணையில்‌ ஊற்றி 2 நாட்கள்‌ நிழலான இடத்தில்‌ வைக்கவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சி ஊக்கி, கீரை இலைகள்‌ வெளுத்து காணப்பட்டால்‌ 1 -லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 லிட்டர்‌ நீர்‌ சேர்த்து சிரிது சாணக்‌கரைசல்‌ சேர்ந்து தெளிக்க வேண்டும்‌.

புண்ணாக்கு கரைசல்‌ (முறை 2)

தேவையானவை:
கடலை புண்ணாக்கு 10 கிலோ, தண்ணீர்‌ 100 லிட்டர்‌

செய்முறை:
தண்ணீர்‌ மற்றும்‌ பொடியாக்கிய புண்ணாக்கு. வாளியில்‌ (அ) மண்பாணையில்‌ ஊற்றி 2 நாட்கள்‌ நிழலான இடத்தில்‌ வைக்கவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
இவை ஒரு பயிர்‌ வளர்ச்சியை தூன்டக்கூடியது. செடியின்‌ வேர்பகுதியில்‌ 250 மில்லி ஊற்ற வேண்டும்‌. செடி நட்‌ட 20 நாளில்‌ இருந்து வாரம்‌ ஒரு முறை இவ்வாறு செய்யலாம்‌.

புண்ணாக்கு கரைசல்‌ (முறை 3)

தேவையானவை:
கடலை புண்ணாக்கு 15 கிலோ, எள்ளு புண்ணாக்கு 15, வோப்பம்‌கொட்டை துள்‌ 15 கிலோ, சூடமோனஸ்‌ 250 கிராம்‌, டரைகோடர்மா வீரிடி 250 கிராம்‌, தண்ணீர்‌ 20 லிட்டர்‌, கோமியம்‌ 20 லிட்டர்‌.

செய்முறை:
அனைத்தையும்‌ கலந்து வாளியில்‌ (அ) மண்பாணையில்‌ ஊற்றி 3 நாட்கள்‌
நிழலான இடத்தில்‌ வைக்கவும்‌.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
பயிர்‌ வளர்ச்சியை ஊக்கி(குறிப்பாக மல்லிகை பூ,இக்கரைசலுடன்‌ 50 லிட்டர்‌ தண்ணீர்‌ செர்த்து செடியின்‌ வேர்பகுதியில்‌ 200 மில்லி ஊற்ற வேண்டும்‌. 3 மாதத்திற்கு ஒரு முறை இவ்வாறு செய்யலாம்‌.

புண்ணாக்கு கரைசல்‌ (முறை 4)

தேவையானவை:
கடலை புண்ணாக்கு – 10 கிலோ, தேங்காய்‌ புண்ணாக்கு – 10கிலோ, பருத்தி விதை புண்ணாக்கு – 10கிலோ, வோப்பம்‌ புண்ணாக்கு – 10 கிலோ, பாஸபோ பக்டிரயா – 1.5 கிலோ, அசோஸ்பயிரில்லம்‌ – 1.5 கிலோ, ஹயுமிக்‌ பவுடர்‌ 1.5 கிலோ, தண்ணீர்‌ – 200 லிட்டர்‌.

செய்முறை:
அனைத்து புண்ணாக்தையும்‌ தனிதனியே நான்கு நாள்‌ ஊறவைத்து பின்பு மற்றவற்றையும்‌ கலந்து பயன்‌ படுத்தலாம்‌;.

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
பயிர்‌ வளர்ச்சியை ஊக்கி(அதிக கொடி காய்‌உற்பத்தி)., இக்கரைசலை 500 மில்லி ஒவ்வொரு செடிக்கு ஊற்ற வேண்டும்‌. 20 நாட்கள்‌இடைவெளியில்‌.

புண்ணாக்கு கரைசல்‌ (முறை 5)

தேவையானவை:
வோப்பம்‌ புண்ணாக்கு 2 கிலோ, கடலை புண்ணாக்கு 1 கிலோ, எள்ளு புண்ணாக்கு 2 கிலோ, பசுஞ்சாணம்‌ 5 கிலோ, பசும்பால்‌ 2 லிட்டாரர்‌, பசு கோமியம்‌ 5 லிட்டர்‌,தண்ணீர்‌ 50 லிட்டர்‌.

செய்முறை:
அனைத்தையும்‌ போட்டு கலந்து 4 நாட்கள்‌ வைத்து இருக்கவேண்டும்‌ (தினமும்‌ காலை மாலை கலக்கிவரவும்‌.)

பயன்‌ மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறை:
பயிர்‌ வளர்ச்சியை ஊக்கி (அதிக கொடி காய்‌ (பாகல்‌) உற்பத்தி). இக்கரைசலை 1 லிட்டர்‌ கரைசலுடன்‌ 10 தண்ணீர்‌ சேர்த்து தெளித்துவந்தால்‌ (வாரம்‌ இருமுறை பயிர்‌ ஊட்டமாக வளரும்‌. மீதமுள்ள வண்டலை செடிகளின்‌ வேர்களில்‌ போட்டுவரவும்‌.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments