Tuesday, September 17, 2024
Home Heritage Lifestyle Food & Recipes முடக்கத்தான் கீரை துவையல்

முடக்கத்தான் கீரை துவையல்

தேவையான பொருட்கள்:

முடக்கத்தான் கீரை – 50 கிராம்
உளுந்தம்பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – இரண்டு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம்பருப்பு, மிளகாய் போட்டு வதக்கி பின் கீரையை போடா வேண்டும். அதுவும் நன்கு வதக்கி வதங்க வேண்டும் பின் ஆற வைத்து மிக்சியில் அரைத்து துவையலாக சாதத்துடனும், இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.

மருத்துவ பயன்கள்:

முடக்கத்தான் கீரை துவர்ப்புச் சுவை உடையது. அதிக மருத்துவகுணங்கள் நிறைந்தது. இந்தக்கீரையில் சரியான அளவில் தாது உப்புக்களும் வைட்டமின்களும் உள்ளது. இதனை சரியான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலநோய், மலச்சிக்கல், தோல் நோய்கள் போன்ற பல நோய்கள் குணமடையும். கை கால் வலி, மூட்டு வலி, முதுகு வலி, உடல்வலி ஆகிய அணைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். மூட்டுகளில் தங்கி இருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத் திரட்சி படிவங்களை கரைத்து வலிகளை போக்க வழி செய்கிறது. வாயுத்தொல்லை உள்ளவர்கள் முடக்கத்தான் கீரை சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிட்டும்.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments