Thursday, September 19, 2024
Home Heritage Lifestyle Food & Recipes மோர் குழம்பு

மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:

புளிக்காத தயிர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய்- 1/4 கப்
மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு
எண்ணெய் , சீரகம், கடுகு- தாளிக்க

செய்முறை:

தேங்காய் சிறிது சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். தயிரில் உப்பு மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சற்று சுற்றி எடுக்கவும். இத்துடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு கடுகு, சீரகத்தைப் பெரிய விடவும். பின் வற்றல் மிளகாயைக் கிள்ளி போடவும். இதனுடன் மோர் கலவையை சேர்க்கவும். நன்கு நுரை கூடி வரும் நேரம் தீயை அணைத்து விடவும். காய்கள் வேண்டுமென்றால் வேகவைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

மருத்துவப் பயன்கள்:

1. கோடையின் உஷ்ணத்தை மோர் உணவில் சேர்த்துக் கொள்வதால் குறைக்கலாம்.
2. தயிரை விட மோர் சிறந்தது. மிக எளிதில் ஜீரணமாகிவிடும்.
3. உடல் எடையைக் குறைக்கவல்லது.
4. மூலநோய் உள்ளவர்கள் மோர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிட்டும்.
5. வெய்யிலால் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை உண்டாகும். இவற்றை எளிதில் மோர் குணமாக்கும்.
6. வயிற்றுப்போக்கு அஜீரணக் கோளாறுகளுக்கு எல்லாம் சிறந்த மருந்து.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments