Thursday, September 19, 2024
Home Heritage Lifestyle Food & Recipes வெந்தயக் கீரை சூப்

வெந்தயக் கீரை சூப்

தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை – 1 கப்
சின்ன வெங்காயம் – 2
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
நெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெந்தயக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். சீரகம் மிளகு ஒன்றிரண்டாக இடித்து பொடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கவும் பின் பூண்டு வெந்தயக் கீரையை போடவும். தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். நன்கு வெந்த பின் மிளகு, சீராகப் பொடி, உப்பு போட்டு இறக்கவும். இதனை வடிகட்டி குடிக்கலாம். அப்படியே சூப்பாகவும் அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்:

1. வெந்தயக் கீரையில் வைட்டமின்கள் ஏ, பி, சி யும், கால்சியமும் அதிக அளவில் உள்ளது.
2. வெந்தயக் கீரை அஜீரணத்தை போக்கி பசி எடுக்க உதவுகிறது.
3. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலியை குணமாக்குகிறது.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments