Tuesday, September 17, 2024
Home History Temples வேதம் -ஒரு சுருக்கமான முன்னோட்டம்

வேதம் -ஒரு சுருக்கமான முன்னோட்டம்

வேதம் என்ற சொல்லின் தாது அல்லது பகுருதி வித் என்பதாகும். வித்-அறிவு, வேதம் என்பதற்கு அறிவு நூல் என்பது போறும். தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. இது ஆசிரியரிடம் கேட்டுத்  தெளியவேண்டிய நூலாதலால் இதனை “சுருதி”யெனவும் கூறுவார். இதனை ரிக், யஜுர்,சாமம், அதர்வணம் என நான்காக வியாசர் வகுத்துள்ளார்.

ரிக் வேதம்:
ரிக் என்பதற்கு துதித்தல் அல்லது வழிபடல் என்பது பொருள். இறைவனை துதிப்பாடல்கள் பாடி வணங்குவதற்குரிய வழக்குகளை இதில் வகுத்துக்குக் காட்டப்பட்டுள்ளது. இது பத்து மண்டலங்களை கொண்டது. ஒன்று முதல் ஏழு மண்டலங்களில் இறைவனை அக்கினி என்ற பெயராலும், பத்தாவது மண்டலத்தில் பிரம்மன், இந்திரன் தான் என்ற பெயர்களாலும் பாடப்பட்டுள்ளது.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments